காட்டுமன்னார் கோவில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றி பெற்றது செல்லும் - ஐகோர்ட்டு தீர்ப்பு


காட்டுமன்னார் கோவில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றி பெற்றது செல்லும் - ஐகோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 7 Feb 2020 8:45 PM GMT (Updated: 7 Feb 2020 6:50 PM GMT)

காட்டுமன்னார் கோவில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றி பெற்றது செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னை, 

தமிழக சட்டசபைக்கு கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. அப்போது, காட்டுமன்னார் கோவில் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முருகுமாறன் 87 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தோல்வியடைந்தார். 

இதையடுத்து, முருகுமாறன் வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் திருமாவளவன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். ஓட்டு எண்ணிக்கையின்போது, 102 தபால் ஓட்டுகள் நிராகரிக்கப்பட்டதாக திருமாவளவன் தரப்பில் வாதிடப்பட்டது. 

இந்த வழக்கை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்தார். தபால் ஓட்டுகளுடன் காட்டுமன்னார்கோவில் தேர்தல் அதிகாரியை நேரில் ஆஜராக உத்தரவிட்டார். அதன்படி, தேர்தல் அதிகாரி ஆஜராகி தபால் ஓட்டுகள் ஏன் நிராகரிக்கப்பட்டது என்பதற்கு விளக்கம் அளித்தார். இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி சி.வி.கார்த்திகேயன், கடந்த ஜனவரி 21-ந்தேதி உத்தரவிட்டார்.

இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று நீதிபதி பிறப்பித்தார். அதில், ‘காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. முருகுமாறன் வெற்றி பெற்றது செல்லும் என்றும், திருமாவளவனின் தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்கிறேன்’ என்றும் கூறியுள்ளார்.

Next Story