பட்ஜெட்

பட்ஜெட்டில் மாநிலங்களுக்கான நிதி குறைக்கப்படவில்லை- நிர்மலா சீதாராமன் + "||" + In Budget Funding for states has not been reduced Nirmala Sitharaman

பட்ஜெட்டில் மாநிலங்களுக்கான நிதி குறைக்கப்படவில்லை- நிர்மலா சீதாராமன்

பட்ஜெட்டில் மாநிலங்களுக்கான நிதி குறைக்கப்படவில்லை- நிர்மலா சீதாராமன்
பட்ஜெட்டில் மாநிலங்களுக்கான நிதி குறைக்கப்படவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
சென்னை

சென்னையில் நடைபெற்ற  ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  கூறியதாவது:-

வங்கி அதிகாரிகளின் தொடர்புகளை உயர்த்த  மத்திய அரசிடம் திட்டம் உள்ளது.  நாட்டின் பொருளாதாரம் ஒரு 'வலுவான நிலையில் உள்ளது. அந்நிய செலாவணி இருப்பு மற்றும் அன்னிய நேரடி முதலீடுகள் அதிகபட்ச நிலையில் உள்ளன.

அமைச்சகத்தின்  அதிகாரிகள் கள அளவில் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (எம்.எஸ்.எம்.இ) தொழில்முனைவோரை அணுகுவார்கள.

எம்.எஸ்.எம்.இ.களுக்கு காரணமின்றி வங்கிகள் கடன்களை மறுக்கிறார்களானால், அவர்கள்  தங்கள் புகார்களை அனுப்பலாம்,அதற்குறிய வசதி இது விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதன் நகலை வங்கி மேலாளருக்கு அனுப்ப வேண்டும் என கூறினார்.

பின்னர் நிர்மலா சீதாராமன் சென்னை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பட்ஜெட்டில் மாநிலங்களுக்கான நிதி குறைக்கப்படவில்லை.எந்த மாநிலத்திற்கு என்றும் தனியாக நிலுவைத்தொகை வைக்கவில்லை. விரைவில் நிலுவைத் தொகை வழங்கப்படும்.  விவசாயிகளுக்கான நிதி உதவிகள்  அதிகரிக்கப்பட்டு உள்ளது. 

பொதுமக்களின் பங்கும் இருக்க வேண்டும் என்பதற்காகவே, எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கு விற்கத் திட்டம்; எத்தனை சதவிகித பங்குகள் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அன்னிய முதலீடுகளுக்கு டெல்லி வன்முறையால் பாதிப்பு இல்லை ;நிர்மலா சீதாராமன் சொல்கிறார்
அன்னிய முதலீடுகளுக்கு டெல்லி வன்முறையால் பாதிப்பு இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2. மத்திய பட்ஜெட் சிறப்பானது என மக்கள் உணர்ந்துள்ளனர் ; பிரதமர் மோடி
மத்திய பட்ஜெட் சிறப்பானது என மக்கள் உணர்ந்துள்ளனர் என்று பாஜக பாராளுமன்றக் குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
3. மத்திய பட்ஜெட்: சென்னை-பெங்களூரு அதிவேக நெடுஞ்சாலை திட்டம்
உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.103 லட்சம் கோடியில் திட்டங்கள் நிறைவேற்றப்படும். சென்னை–பெங்களூரு அதிவேக நெடுஞ்சாலை திட்டம் தொடங்கப்படும். தனியார் பங்களிப்புடன் 150 பயணிகள் ரெயில்கள் விடப்படுகின்றன என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
4. மத்திய பட்ஜெட்டில் விவசாயி, வியாபாரிகளுக்கு எந்த பயனும் இல்லை - சஞ்சய்தத் குற்றச்சாட்டு
மத்திய பட்ஜெட்டில் விவசாயி, வியாபாரிகளுக்கு எந்த பயனும் இல்லை என்று அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் குற்றம்சாட்டினார்.
5. 2020-21 பட்ஜெட் குறித்து தலைவர்கள் கருத்து
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2020-21 பட்ஜெட் குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.