அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் தொடங்கியது; 14 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு


அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் தொடங்கியது; 14 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 10 Feb 2020 5:42 AM GMT (Updated: 10 Feb 2020 5:42 AM GMT)

அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் கட்சி வளர்ச்சி, உள்ளாட்சி தேர்தல் பணிகள் ஆகியவை பற்றி 14 மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

சென்னை,

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று காலை தொடங்கியுள்ளது.  இந்த கூட்டம் தொடர்ந்து பிப்ரவரி 13ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.

அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் உள்ளாட்சி தேர்தல் பணிகள் ஆகியவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

இக்கூட்டத்தில் மாவட்ட தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், நாடாளுமன்றம், சட்டமன்றம் உறுப்பினர்கள், கழக செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இதன்படி கட்சி வளர்ச்சி, உள்ளாட்சி தேர்தல் பணிகள் ஆகியவை பற்றி 14 மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.  தொடர்ந்து பிற மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனை மேற்கொள்ளப்படும்.

Next Story