மாநில செய்திகள்

காவிரி டெல்டா, வேளாண்மை பாதுகாப்பு மண்டலமாக அறிவிப்பு தமிழக அரசின் முடிவை வரவேற்கிறேன் - சசிகலாவை சந்தித்த பின் டி.டி.வி.தினகரன் பேட்டி + "||" + Cauvery Delta Declares Agricultural Protection Zone - Interview with TTV Dinagaran after meeting Sasikala

காவிரி டெல்டா, வேளாண்மை பாதுகாப்பு மண்டலமாக அறிவிப்பு தமிழக அரசின் முடிவை வரவேற்கிறேன் - சசிகலாவை சந்தித்த பின் டி.டி.வி.தினகரன் பேட்டி

காவிரி டெல்டா, வேளாண்மை பாதுகாப்பு மண்டலமாக அறிவிப்பு தமிழக அரசின் முடிவை வரவேற்கிறேன் - சசிகலாவை சந்தித்த பின் டி.டி.வி.தினகரன் பேட்டி
காவிரி டெல்டா, வேளாண்மை பாதுகாப்பு மண்டலமாக அறிவிப்பு தமிழக அரசின் முடிவை வரவேற்பதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு, 

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதியை வேளாண்மை பாதுகாப்பு மண்டலமாக அரசு அறிவித்துள்ளது. மக்களின் போராட்டத்திற்கு அடிபணிந்து தமிழக அரசு இதை அறிவித்துள்ளது. அரசின் இந்த முடிவை நான் வரவேற்கிறேன். இதை அறிவிப்போடு நிறுத்தாமல் உண்மையாக செயல்படுத்த வேண்டும். இதே போன்று சேலம்-சென்னை 8 வழிச்சாலை, நியூட்ரினோ திட்டத்தையும் அமல்படுத்தக்கூடாது. 

தமிழருவி மணியன் 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் உள்ளவர். அவருடன் எனக்கு நேரடியாக எந்த தொடர்பும் கிடையாது. ஆனால் அவரை மதிக்கிறேன். அவரை விமர்சித்து புண்படுத்த விரும்பவில்லை. காவிரி ஆற்றில் மாசு கலப்பதாக புகார் உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சரி வருமான வரித்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படக்கூடாது” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு
காவிரி டெல்டா பகுதிகளை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து பாதுகாக்க வகை செய்யும் மசோதா நேற்று சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
2. காவிரி டெல்டா பற்றிய அறிவிப்பு: எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி பாராட்டு
காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்று அறிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.
3. காவிரி டெல்டா பகுதியை ‘வேளாண் மண்டலமாக அறிவிப்பதை வரவேற்கிறோம்’ - கே.எஸ்.அழகிரி பேட்டி
காவிரி டெல்டா பகுதியை ‘வேளாண் மண்டலமாக அறிவிப்பதை வரவேற்கிறோம்’ என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.