அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்; தலைமை அலுவலகம் முன் தொண்டர்கள் போராட்டம்


அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்; தலைமை அலுவலகம் முன் தொண்டர்கள் போராட்டம்
x

சென்னையில் இன்று 2வது நாளாக நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கும் முன் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பு ஏற்படுத்தியது.

சென்னை,

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் நேற்று காலை தொடங்கியது.  அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் உள்ளாட்சி தேர்தல் பணிகள் ஆகியவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், நாடாளுமன்றம், சட்டமன்றம் உறுப்பினர்கள், கழக செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதன்படி கட்சி வளர்ச்சி, உள்ளாட்சி தேர்தல் பணிகள் ஆகியவை பற்றி 14 மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.  இதனை அடுத்து இன்று 2வது நாளாக ஆலோசனை கூட்டம் நடந்தது.  அ.தி.மு.க. நிர்வாகிகள் தொடங்கும் முன் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பு ஏற்படுத்தியது.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் திருவண்ணாமலை, நீலகிரி, சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றுள்ளனர்.

கட்சியின் வளர்ச்சி மற்றும் தேர்தல் பணிகள் குறித்து அவர்கள் ஆலோசித்து வருகின்றனர். கூட்டம் தொடங்கும் முன், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை சேர்ந்த அ.தி.மு.க.வினர் தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.விற்கு ஆதரவாக செய்யாறு எம்.எல்.ஏ. தூசி மோகன் செயல்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர். அவர்களை அ.தி.மு.க. பிரமுகர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Next Story