மாநில செய்திகள்

50 லட்சம் வேலைவாய்ப்பு ஏற்படுத்த இலக்கு பா.ம.க. சார்பில் விவசாய நிழல் பட்ஜெட் - டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார் + "||" + MPs set to target 50 lakh jobs Agricultural Shadow Budget on behalf of PMK - released by Dr. Ramadas

50 லட்சம் வேலைவாய்ப்பு ஏற்படுத்த இலக்கு பா.ம.க. சார்பில் விவசாய நிழல் பட்ஜெட் - டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார்

50 லட்சம் வேலைவாய்ப்பு ஏற்படுத்த இலக்கு பா.ம.க. சார்பில் விவசாய நிழல் பட்ஜெட் - டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார்
பா.ம.க. சார்பில் விவசாய நிழல் பட்ஜெட்டை டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார். அதில் விவசாயம், தோட்டக்கலைத்துறையில் 50 லட்சம் வேலைவாய்ப்பு ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
சென்னை, 

பா.ம.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நிழல் பட்ஜெட் வெளியிடப்பட்டு வருகிறது. அந்தவகையில் 13-வது ஆண்டு நிழல் பட்ஜெட் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ம.க. தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிழல் பட்ஜெட்டை வெளியிட்டார்.

அப்போது பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, வக்கீல் பாலு உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர். முன்னதாக காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

69 பொருளடக்கங்களில் 59 பக்கங்களை கொண்ட அந்த விவசாய நிழல் பட்ஜெட்டில் 265 யோசனைகள் இடம் பெற்றிருக்கிறது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* விவசாயம் மற்றும் தோட்டக்கலைத்துறையில் 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த இலக்கு நிர்ணயம்.

* கிராமப்புறங்களில் விவசாயம் மற்றும் என்ஜினீயரிங் பட்டதாரிகளை ஒருங்கிணைத்து விவசாயம் மற்றும் தோட்டக்கலை ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தப் படும். இதன்மூலம் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் கிடைக் கும்.

* தென்னை மரங்களில் இருந்து இறக்கப்படும் நீரா பானத்தை பாதுகாப்பான உறைகளில் அடைத்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

* கிராமப்புற சுயஉதவிக்குழுக்கள் மூலம் ஆடுகள், கோழிகள், வான்கோழிகள், மீன்கள் விற்கப்படும்.

* மழை, வெள்ளம், வறட்சி, புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் பயிர்கள் பாதிக்கப்படும்போது, விவசாய பயிர்களுக்கு ஒரு மாதத்துக்குள் இழப்பீடு வழங்கப்படும்.

* விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் கரும்புக்கு கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்.

* பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களில் மூலதன கடன்கள் தவிர ரூ.22 ஆயிரம் கோடி பயிர்க்கடன்கள் மட்டும் தள்ளுபடி செய்யப்படும்.

* தமிழகத்தை 4 மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு விவசாய பல்கலைக்கழகம் அமைக்கப்படும். கோவையில் ஏற்கனவே விவசாய பல்கலைக்கழகம் உள்ள நிலையில், தஞ்சை, வேலூர், நெல்லை ஆகிய நகரங்களில் புதிய பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும்.

* இயற்கை விவசாயத்துக்கு புதிய துறை ஏற்படுத்தப்படும்.

* பனை மரங்களை வெட்ட தடை விதிக்கப்படும். தமிழகத்தில் பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப் படும்.

* வேளாண் துறை சார்ந்த பணிகளை கவனிக்க விவசாயம், தோட்டக்கலை, விவசாய சந்தை, நீர்வள மேலாண்மை என 4 அமைச்சகங்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு அமைச்சகத்துக்கும் தனித்தனி அமைச்சர்கள் என 4 அமைச்சர்கள் நியமிக்கப்படுவார் கள். மேற்கண்ட முக்கிய அம்சங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. வேலைவாய்ப்பு கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் சினிமா தியேட்டர் ஊழியர்கள் மனு
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சினிமா தியேட்டர் ஊழியர்கள் வேலை வாய்ப்பு கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...