மாநில செய்திகள்

ரஜினிகாந்த் கட்சியுடன் கூட்டணியா? - டாக்டர் ராமதாஸ் பதில் + "||" + Alliance with Rajinikanth Party? - Reply by Dr. Ramadas

ரஜினிகாந்த் கட்சியுடன் கூட்டணியா? - டாக்டர் ராமதாஸ் பதில்

ரஜினிகாந்த் கட்சியுடன் கூட்டணியா? - டாக்டர் ராமதாஸ் பதில்
ரஜினிகாந்த் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படுமா? என்பதற்கு டாக்டர் ராமதாஸ் பதில் அளித்துள்ளார்.
சென்னை,

பா.ம.க. சார்பில் விவசாய நிழல் பட்ஜெட்டை வெளியிட்ட டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நமக்கு உணவு அளிக்கும் விவசாயிகளுக்கு பா.ம.க. எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை, இந்த நிழல் பட்ஜெட்டில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். விவசாயிகள் இல்லை என்றால், உலகமே இல்லை. ஆனால் விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில்லை. காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 4 ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தோம்.

இதனை ஏற்று தமிழக அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கும்போது, நாங்கள் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தோம். அதில் ஒன்று தான் இது. காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்.

ரஜினிகாந்த் கட்சி தொடங்கப்போவதாகவும், பா.ம.க.வுடன் கூட்டணி அமைக்க போவதாகவும் தமிழருவி மணியன் கூறியிருக்கிறார். தமிழருவி மணியன் எந்த கருத்தையும் சொல்லலாம். அதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. ரஜினிகாந்த் இன்னும் கட்சி தொடங்கவில்லை. அவர் கட்சி தொடங்கிய பின்னர் எங்களுடைய கருத்தை சொல்கிறோம். ரஜினிகாந்த் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை எதுவும் தற்போதைக்கு தொடங்கவில்லை.

அமைதி பூங்காவாக இருந்த தமிழகம் மாறி வருகிறது. எடுத்ததற்கெல்லாம் தேவையற்ற போராட்டங்களை சிலர் நடத்தி வருகிறார்கள். மக்களுக்கு கேடு விளைவிக்கும் பிரச்சினைகளுக்காக போராட வேண்டும். கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அன்புமணி ராமதாஸ் எம்.பி.யும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். இந்த விவகாரத்துக்காக கோரிக்கை போராட்டத்தை தொடருவோம். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. 'ரஜினி மலை, அஜித் தலை' அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ரைமிங்
'ரஜினி மலை, அஜித் தலை' என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரைமிங்காக கூறி உள்ளார்.
2. ரஜினிகாந்த் படத்தின் பெயர், ‘அண்ணாத்த?’
ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் அவருடைய 168-வது படத்துக்கு, ‘அண்ணாத்த’ என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாக பேசப்படுகிறது.
3. ரஜினியின் புது படத்தில் சம்பளம் குறைப்பா? படக்குழுவினர் மறுப்பு
ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படத்தில் சம்பளத்தை குறைத்து கொண்டதாக இணைய தளங்களில் தகவல் பரவி உள்ளது.
4. பொதுமக்களை சந்திக்கிறார்: தமிழகம் முழுவதும் பயணம் செய்ய ரஜினிகாந்த் திட்டம்
ரஜினிகாந்த் செப்டம்பரில் தமிழகம் முழுவதும் பயணம் செய்யும் திட்டத்தில் இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
5. தமிழ்நாட்டை ரஜினிகாந்த் ஆட்சி செய்ய ஒருபோதும் அனுமதிக்க முடியாது..!- பாரதிராஜா
தமிழ்நாட்டை ரஜினிகாந்த் ஆட்சி செய்ய ஒரு போதும் அனுமதிக்க முடியாது என பாரதிராஜா கூறி உள்ளார்.