தமிழக சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் கொண்டுவர வேண்டும் - பேரவை செயலாளரிடம் தி.மு.க. மனு


தமிழக சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் கொண்டுவர வேண்டும் - பேரவை செயலாளரிடம் தி.மு.க. மனு
x
தினத்தந்தி 11 Feb 2020 9:00 PM GMT (Updated: 11 Feb 2020 8:53 PM GMT)

தமிழக சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று பேரவை செயலாளரிடம் தி.மு.க. மனு அளித்துள்ளது.

சென்னை, 

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மாதம் 6-ந் தேதி தொடங்கி 4 நாட்கள் நடைபெற்றது. அப்போது, அந்த கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பேரவை செயலாளரிடம், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கையொப்பமிட்ட தனிநபர் தீர்மானத்தை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அளித்தனர். 

அந்த கூட்டத் தொடரில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக தீர்மானம் கொண்டு வர தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்திய போதும், கூட்டத்தொடரில் இந்த தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துகொள்ளப்படவில்லை.

இந்தநிலையில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 14-ந் தேதி(வெள்ளிக்கிழமை) கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று தலைமை செயலகத்தில் பேரவை செயலாளரை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் நேற்று சந்தித்து மனு அளித்தனர்.

Next Story