மாநில செய்திகள்

டெல்லி சட்டசபை தேர்தலில் மீண்டும் வெற்றி: கெஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து + "||" + Victory in Delhi assembly election: MK Stalin congratulates Kejriwal

டெல்லி சட்டசபை தேர்தலில் மீண்டும் வெற்றி: கெஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

டெல்லி சட்டசபை தேர்தலில் மீண்டும் வெற்றி: கெஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
டெல்லி சட்டசபை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற கெஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை, 

டெல்லியில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், ஆம்ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. முதல்-மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் தொடர இருக்கிறார். அவருக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “மாபெரும் தேர்தல் வெற்றி மூலம், டெல்லியில் மீண்டும் ஆட்சியமைக்க இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். வளர்ச்சி - வகுப்புவாதத்தை வீழ்த்தும் என்பதற்கான தெளிவான நிரூபணம் இது. நாட்டின் ஒற்றுமைக்காக நாம், கூட்டாட்சி உரிமைகள் மற்றும் பிராந்திய விருப்பங்களை வலுப்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதேபோல் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தாபானர்ஜி, ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் மனோஜ் ஜா, கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி சட்டசபை தேர்தல்; ஆம் ஆத்மி-32, பா.ஜ.க.-16 முன்னிலை; தேர்தல் ஆணையம் அறிவிப்பு
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 32 இடங்களில் முன்னிலையில் உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2. டெல்லி சட்டசபை தேர்தல்; 5 மணி நிலவரப்படி 44.52 சதவீத வாக்குகள் பதிவு
டெல்லி சட்டசபை தேர்தலில் 5 மணி நிலவரப்படி 44.52 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
3. டெல்லி சட்டசபை தேர்தல்: முதல் முறையாக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு
டெல்லியில் விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் முதல் முறையாக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
4. டெல்லி சட்டசபை தேர்தல் : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கமல்ஹாசன் ஆதரவு
டெல்லியில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
5. டெல்லி சட்டசபை தேர்தல்: பா.ஜனதா வேட்பாளர் பிரசாரம் செய்ய 2 நாள் தடை - தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவு
டெல்லி சட்டசபை தேர்தலில், பா.ஜனதா வேட்பாளர் பிரசாரம் செய்ய 2 நாள் தடை விதித்து தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை