நாளை தமிழக பட்ஜெட் கூட்டம்: முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்


நாளை தமிழக பட்ஜெட் கூட்டம்: முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
x
தினத்தந்தி 13 Feb 2020 9:06 AM GMT (Updated: 13 Feb 2020 9:06 AM GMT)

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்த சட்டம், ஹைட்ரோ கார்பன், குரூப் - 4 தேர்வு முறைகேடு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.

சென்னை

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதில், முதல் நாள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால், கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, குடியுரிமை திருத்த சட்டம் பிரச்சினை, 'ஹைட்ரோ கார்பன்' திட்டம், 'குரூப் - 4' தேர்வு முறைகேடு உட்பட பல்வேறு பிரச்சினைகளை, எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளன.

டெல்டா மாவட்டங்களை, பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலமாக மாற்ற, சட்டம் இயற்றும்படியும், குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தீர்மானம் கொண்டு வரும்படியும், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்த திட்டமிட்டுள்ளன.

Next Story