மாநில செய்திகள்

70 குழந்தைகளுடன் விமானத்தில் பறந்தபடி, சூர்யா பட பாடல் வெளியீடு + "||" + 70 kids aboard flee the country, Surya Songs Release

70 குழந்தைகளுடன் விமானத்தில் பறந்தபடி, சூர்யா பட பாடல் வெளியீடு

70 குழந்தைகளுடன் விமானத்தில் பறந்தபடி, சூர்யா பட பாடல் வெளியீடு
சூர்யா நடித்த ‘சூரரை போற்று’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா, பறக்கும் விமானத்தில் நடந்தது. 70 குழந்தைகளுடன் விமானத்தில் பறந்தபடி, சூர்யா பாடலை வெளியிட்டார்.
சென்னை, 

சூர்யா நடித்த ‘சூரரை போற்று’ படத்தை சுதா கொங்கரா டைரக்டு செய்கிறார். இதில், கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி வருகிறார். முக்கிய வேடத்தில், இந்தி நடிகர் ஜாக்கி ஷராப் நடிக்கிறார். ஊர்வசி, மோகன்பாபு, கருணாஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஏர்டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை கூறும் படமாக, இந்த படம் தயாராகி வருகிறது. படத்தின் பெரும்பகுதி காட்சிகள் விமானத்தில் நடப்பதால், படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை விமானத்தில் பறந்தபடி வெளியிட திட்டமிட்டார்கள்.

குழந்தைகள் தொடர்பான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம், இது. அதனால், இந்த புதுமையான முயற்சியில் குழந்தைகள் கலந்து கொள்ள வேண்டும் என்று சூர்யா விரும்பினார். அவரது அகரம் அறக்கட்டளையில் படிக்கும் குழந்தைகளில் முதல்முறையாக விமானத்தில் பயணம் செய்யும் 70 குழந்தைகளை தேர்ந் தெடுத்து அழைத்து செல்ல திட்டமிட்டு இருந்தார்.

அதன்படி, சூர்யா நேற்று பகல் 1.30 மணிக்கு விமானத்தில் நடைபெற்ற பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு குழந்தைகளை அழைத்து சென்றார். விமானத்தில் பறந்தபடி அவரும், விமானத்தின் தலைவர் அஜய் சிங்கும் சேர்ந்து, ‘சூரரை போற்று’ படத்தின் பாடலை வெளியிட்டார்கள்.

விழாவில் நடிகர்கள் சிவகுமார், மோகன்பாபு, டைரக்டர் சுதா கொங்கரா, இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ், பாடல் ஆசிரியர் விவேக், படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.