மசூதி- கிறிஸ்துவ தேவாலயங்களின் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவி ரூ.5 கோடியாக உயர்வு


மசூதி- கிறிஸ்துவ தேவாலயங்களின்  பராமரிப்புக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவி ரூ.5 கோடியாக உயர்வு
x
தினத்தந்தி 14 Feb 2020 6:00 AM GMT (Updated: 14 Feb 2020 6:00 AM GMT)

மசூதி- கிறிஸ்துவ தேவாலயங்களின் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவி 5 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை

தமிழக பட்ஜெட் கூட்டம் தொடங்கியது.  துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம்  பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். 

பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு சிறந்த வசதிகளை ஏற்படுத்தி, அவர்களுக்கு சிறந்த வாழ்க்கையை ஏற்படுத்தித்தர இந்த அரசு முயற்சி செய்யும். தற்போது புதியதாக வகுக்கப்பட்டு வரும் தமிழ்நாடு மாநில குழந்தை நலன் கொள்கை விரைவில் வெளியிடப்படும்.

* கிறிஸ்துவ தேவாலயங்களின் பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக வழங்கப்படும் நிதியுதவியை 1 கோடியில் இருந்து 5 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

* மசூதிகளின் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவி 60 லட்சம் ரூபாயிலிருந்து 5 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.

* 7,233 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு கோயில்கள் பெயரிலேயே பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Next Story