பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் புதிதாக 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் -ஓ.பன்னீர்செல்வம்


பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் புதிதாக 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் -ஓ.பன்னீர்செல்வம்
x
தினத்தந்தி 14 Feb 2020 6:12 AM GMT (Updated: 14 Feb 2020 6:12 AM GMT)

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் புதிதாக 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது

சென்னை

தமிழக பட்ஜெட் கூட்டம் தொடங்கியது.  துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம்  பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். 

பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* தமிழ் வளர்ச்சி துறைக்கு 74 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* ஹார்வர்டு, ஹூஸ்டன் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழி கற்பித்தலை கொண்டுவர சீரிய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன

* காவல்துறைக்கு - 8876 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* சிறைச்சாலை துறைக்கு 392 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* கோவை அரசு பொறியியல் கல்லூரிக்கு ரூ.10 கோடி மானியம்  - 75 ஆண்டை நிறைவு செய்வதால் தரம் உயர்த்த நடவடிக்கை.

 * முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்திற்கு ரு.959.21 கோடி ஒதுக்கீடு 

* முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் புதிதாக 20 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும் 

* பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் புதிதாக 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் 

Next Story