மகா சிவராத்திரி: தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


மகா சிவராத்திரி: தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Feb 2020 6:40 AM GMT (Updated: 14 Feb 2020 6:40 AM GMT)

மகா சிவராத்திரியை முன்னிட்டு தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை, 

ஆண்டுதோறும் மாசி மாதம் மகா சிவராத்திரி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் மகா சிவராத்திரி பெருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது. 

மகா சிவராத்திரியை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக கீழ்க்கண்ட சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

* தாம்பரம்-நெல்லை(வண்டி எண்: 82603) இடையே சுவிதா சிறப்பு ரெயில் வருகிற 20-ந்தேதி இரவு 8.50 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

* நெல்லை-தாம்பரம்(82604) இடையே சுவிதா சிறப்பு ரெயில் வருகிற 22-ந்தேதி மாலை 6 மணிக்கு நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

இந்த தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story