டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் 30 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்து உள்ளது- தமிழக நிதித்துறை செயலர்


டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் 30 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்து உள்ளது- தமிழக நிதித்துறை செயலர்
x
தினத்தந்தி 14 Feb 2020 8:46 AM GMT (Updated: 14 Feb 2020 8:46 AM GMT)

2019-20 ஆம் நிதியாண்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் 30 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்து உள்ளது என தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

சென்னை

தமிழக  நிதித்துறை செயலர் கிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நிதி நெருக்கடி இருந்தாலும், வளர்ச்சியை நோக்கி தமிழக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.  உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாட்டில் அதிக நிதி வழங்குவது தமிழகம்தான்.

பட்ஜெட்டில் கடந்த ஆண்டை விட 26 சத்வீதம் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சாலைகள், பாசன வசதி, மின் திட்டங்கள், குடிநீர் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய்ப்பட்டு உள்ளது

மத்திய அரசின் வரி வருவாய் ஒதுக்கீடுரூ.7,586 கோடி குறைந்துள்ளது.  வரும் ஆண்டில் நிதி பற்றாக்குறை சாதகமான நிலை அடையும். கூடுதலாக 35,000 பேருக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் 30 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்து உள்ளது  என கூறினார்.

Next Story