ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை கைவிடுக: முதலமைச்சரின் கடிதத்தை வெளியிட்டார் - அமைச்சர் ஜெயக்குமார்


ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை கைவிடுக: முதலமைச்சரின் கடிதத்தை வெளியிட்டார்  - அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 15 Feb 2020 10:18 AM GMT (Updated: 2020-02-15T15:48:34+05:30)

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை கைவிடுக என முதலமைச்சரின் கடிதத்தை அமைச்சர் ஜெயக்குமார் இன்று வெளியிட்டார்.

சென்னை,

மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

முதலமைச்சர்  உத்தரவின் பெரில் என்னுடைய தலைமையில் நவநீத கிருஷ்ணன், விஜிலா சத்யானந்த், செல்வராஜ், முத்துகருப்பன், விஜயகுமார், சந்திரசேகரன், முகமது ஜான் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு வேளாண் துறை முதன்மை செயலர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச்செயலர், புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல முதன்மை உறைவிட ஆணையர் ஆகியோர் அடங்கிய குழு 10.02.2020 அன்று புதுடெல்லியில் மத்திய சுற்றுச்சூழல்,வனம் மற்றும் பருவநிலை மாற்றுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி ஆகியோரை சந்தித்து முதலமைச்சரின் கடிதத்தை கொடுத்தது. அந்த கடிதத்தில் உள்ள விவரங்கள் என்ன என்பது பற்றி சிலர் கேட்டிருக்கிறார்கள். அந்த கடிதத்தின் விவரத்தை மக்கள் தெரிந்து கொள்வது நல்லது எனக்கருதி அக்கடிதத்தை பத்திரிக்கைகளில் வெளியிடுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story