மாநில செய்திகள்

காலை உணவுத்திட்டம்: தமிழக அரசுக்கும் முதல் அமைச்சருக்கும் நன்றி - திவ்யா சத்யராஜ் + "||" + Thank you to the Government of Tamil Nadu and the Chief Minister Divya Satyaraj

காலை உணவுத்திட்டம்: தமிழக அரசுக்கும் முதல் அமைச்சருக்கும் நன்றி - திவ்யா சத்யராஜ்

காலை உணவுத்திட்டம்: தமிழக அரசுக்கும் முதல் அமைச்சருக்கும் நன்றி - திவ்யா சத்யராஜ்
பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்திற்கான அட்சய பாத்திரம் எனும் 2 நவீன சமையலறைகளுக்காக அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் பழனிச்சாமிக்கு திவ்யா சத்யராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை,

ஊட்டசத்து நிபுணரும் நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா சத்யராஜ் அட்சய பாத்திரம் அமைப்பின் விளம்பர தூதராக உள்ளார். 

இந்நிலையில் அவர் கூறியதாவது:

அட்சய பாத்திரா அமைப்பு உலக புகழ்பெற்ற மதிய உணவு திட்டம் ஆகும். நகருக்குள் ஒரு உணவு தயாரிப்பு கூடம் இருந்தால் வசதியாக இருக்கும் என்ற நோக்கத்தில் அமைச்சர் செங்கோட்டையனிடம் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இதை கோரிக்கையாக வைத்தேன். அவரும் முதலமைச்சரிடம்  சேர்ப்பதாக கூறினார்.

முதல்வருக்கும்  கோரிக்கை அனுப்பினோம். குழந்தைகளின் உடல்நலத்திற்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்க கூடாது என்ற நோக்கில் அவர் இதற்கு அனுமதி அளித்ததுடன் இடமும் வழங்கி அடிக்கல்நாட்டி இருக்கிறார்.

இதற்காக தமிழக அரசுக்கும் முதல் அமைச்சருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.