சென்னையில் இன்று மாலை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்


சென்னையில் இன்று மாலை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
x
தினத்தந்தி 17 Feb 2020 5:22 AM GMT (Updated: 17 Feb 2020 5:22 AM GMT)

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று மாலை நடைபெறுகிறது.

சென்னை,

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று மாலை நடைபெறுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். முதன்மை செயலாளர் கே.என்.நேரு, பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். 

உள்கட்சி தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரச்சினைகள், நிறைவேற்றப்படாத அரசு திட்டங்கள், மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து மாவட்ட செயலாளர்களிடம் அறிக்கை பெறப்பட்டு ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.


Next Story