மாநில செய்திகள்

சட்டசபையில் இருந்து வெளி நடப்பு ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம் + "||" + Why is the current out of the assembly? Illustration by MK Stalin

சட்டசபையில் இருந்து வெளி நடப்பு ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம்

சட்டசபையில் இருந்து வெளி நடப்பு  ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம்
வண்ணாரப்பேட்டை சம்பவம் தொடர்பாக முதல்வர் அளித்த விளக்கம் திருப்தி தரவில்லை என சட்டசபையில் இருந்து வெளி நடப்பு செயததாக மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
சென்னை

வண்ணாரப்பேட்டை தடியடி சம்பவம் குறித்து சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். முதல்-அமைச்சர் பதில் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி திமுக  உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடையாள வெளி நடப்பு செய்தனர். 

சிஏஏவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அரசு தயாராக இல்லாததை கண்டித்தும், முதல்வரின் பதிலை ஏற்க மறுத்தும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்புக்கு பின் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வண்ணாரப்பேட்டை சம்பவம் தொடர்பாக முதல்வர் அளித்த விளக்கம் திருப்தி தரவில்லை. திமுகவின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுத்ததை கண்டித்து வெளிநடப்பு செய்தோம். விவாதம் நடத்தாமலேயே ஏற்க மறுப்பதை, ஒருபோதும் ஏற்க முடியாது. இது அடையாள வெளிநடப்புதான் என கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. நான் முதல்வர் அல்ல, மக்கள் சேவகன்; முதல்வர் வாகனத்தில் செல்வதை விட மாட்டு வண்டியில் செல்வதே மகிழ்ச்சி - முதல்வர் பழனிசாமி
நான் முதல்வர் அல்ல, மக்கள் சேவகன். முதல்வர் வாகனத்தில் செல்வதை விட மாட்டு வண்டியில் செல்வதுதான் எனக்கு மகிழ்ச்சி என முதல்வர் பழனிசாமி கூறினார்.
2. கொரோனா காரணமாக பேரவையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை- முதல்வர் பழனிசாமி
கொரோனா காரணமாக பேரவையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
3. கொரோனா அச்சுறுத்தல்: சட்டசபையில் முதல்-அமைச்சர், துரைமுருகன் ருசிகர விவாதம்..!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக எந்த அச்சமும் தேவை இல்லை. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
4. தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை நடைபெறும்- சபாநாயகர் தனபால்
தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என அலுவல் ஆய்வு குழு கூட்டத்திற்கு பின்னர் சபாநாயகர் தனபால் கூறினார்.
5. பொறுப்புணர்வோடு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை, தவறாக பரப்பக்கூடாது- ஓ.பன்னீர் செல்வம்
பொறுப்புணர்வோடு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை தவறாக பரப்பக்கூடாது என சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.