மாநில செய்திகள்

வேளாண் மண்டலம் கொண்டு வர நாடாளுமன்றத்தில் தி.மு.க. ஏன் குரல் கொடுக்கவில்லை? - துரைமுருகனுக்கு, எடப்பாடி பழனிசாமி கேள்வி + "||" + DMK in Parliament to bring Agriculture Zone Why not give voice? - For Duraimurugan, the question of Edappadi Palanisamy

வேளாண் மண்டலம் கொண்டு வர நாடாளுமன்றத்தில் தி.மு.க. ஏன் குரல் கொடுக்கவில்லை? - துரைமுருகனுக்கு, எடப்பாடி பழனிசாமி கேள்வி

வேளாண் மண்டலம் கொண்டு வர நாடாளுமன்றத்தில் தி.மு.க. ஏன் குரல் கொடுக்கவில்லை? - துரைமுருகனுக்கு, எடப்பாடி பழனிசாமி கேள்வி
வேளாண் மண்டலம் கொண்டு வர நாடாளுமன்றத்தில் தி.மு.க. ஏன் குரல் கொடுக்கவில்லை என்று துரைமுருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
சென்னை, 

சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் தி.மு.க. உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (குறிஞ்சிபாடி), ‘கருங்குழி ஊராட்சியில் துணை மின்நிலையம் அமைக்கும் பணிகளை தொடங்க அரசு ஆவன செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார். மேலும் அவர், தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது, தற்போதையை அரசு தட்கல் முறை கொண்டு வந்து இலவச மின்சாரம் நிறுத்தி விட்டது என்று குற்றம் சாட்டினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

அமைச்சர் பி.தங்கமணி:-உறுப்பினர் கூறிய பகுதியில் இடம் கிடைப்பது அரிதாக உள்ளது. நிலத்தின் விலையும் அதிகமாக உள்ளது. குறைந்த விலையில் இடத்தை உறுப்பினர் பெற்று தந்தால், அங்கு துணை மின்நிலையம் அமைத்து தரப்படும். உள்பகுதியில் இருந்தாலும் பரவாயில்லை. வாகனங்கள் சென்று வர பாதை வேண்டும். அப்படி இடம் தேர்வு செய்து தந்தால் துணை மின் நிலையம் அமைத்து தர அரசு தயாராக உள்ளது.

இலவசம் மின்சாரம் குறித்து அவைக்கு உறுப்பினர் தவறான தகவலை தருகிறார். தட்கல் முறை கொண்டு வந்ததால் இலவச மின்சாரம் நிறுத்தப்பட்டதா என்று கேள்வி எழுப்புகிறார். உங்கள் ஆட்சி முடியும் தருவாயில் 7 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவித்தீர்கள். ஆனால் 1 லட்சம் மின் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டது. மேலும் உங்கள் (தி.மு.க.) ஆட்சியில் மின்சாரமே இல்லை. பிறகு எப்படி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்தீர்கள். மின்சாரம் இருந்தால் தானே மின் இணைப்புகளுக்கு மின்சாரம் வழங்க முடியும்.

தட்கல் முறை என்பது கட்டாயம் அல்ல. தட்கல் முறையில் மின் இணைப்பு பெற யாரையும் வற்புறுத்தவில்லை. உடனடியாக மின்இணைப்பு கேட்பவர்கள் தான் தட்கல் முறையை கேட்கின்றனர். சூப்பர் தட்கல் கொண்டு வந்தாலும் சரி என்கிறார்கள். தட்கல் என்பது மக்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப வழங்கப்படுவது. அது கட்டாயம் அல்ல. கடந்த 3 ஆண்டுகளில் 72 ஆயிரத்து 621 புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் தொடர்ந்து மின் இணைப்பு வழங்கி வருகிறோம். இது விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்று தந்துள்ளது. அதேநேரத்தில், தமிழக அரசு தொடர்ந்து இலவச மின்சாரத்தையும் வழங்கி வருகிறது.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன்:- உங்கள் ஆட்சியில் மின்சாரம் இருக்கிறது என்கிறீர்கள். அப்படியென்றால் கேட்பவர்களுக்கு மின்சாரம் வழங்க வேண்டியது தானே? இதை தானே எங்கள் உறுப்பினர் கேட்டார். நீங்கள் விவசாய பகுதிகளை வேளாண்மை மண்டலமாக அறிவித்தீர்கள். வரவேற்கிறோம், அதை தீர்மானமாக கொண்டு வாருங்களேன்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:-அன்று 37 உறுப்பினர்களை வைத்துக்கொண்டு என்ன செய்தீர்கள் என்று எங்களை பார்த்து கேட்டீர்கள். அதையே நாங்கள் கேட்கிறோம். நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் வெற்றி பெற்று அதிகமான உறுப்பினர்களை பெற்று இருக்கிறீர்களே? நீங்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை. பேசி வாங்கி கொடுத்திருக்க வேண்டியது தானே?. 14 ஆண்டுகள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தீர்கள். அப்போது சிறப்பு பாதுகாப்பு வேளாண் மண்டலம் கொண்டு வந்திருக்கலாமே?.

துரைமுருகன்:-நீங்கள் எதையாவது அறிவித்து விட்டு நாங்கள் பேச வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?. நாடாளுமன்றத்தில் நாங்களும், மத்திய அரசும் எதிரும், புதிருமாக இருக்கிறோம். நீங்கள் தான் இணக்கமாக இருக்கிறீர்கள். இவ்வாறு விவாதம் நடந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி: நாடாளுமன்றம் முன்கூட்டியே ஒத்திவைப்பு; நிதி மசோதா நிறைவேறியது
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, நாடாளுமன்றம் முன்கூட்டியே ஒத்திவைக்கப்பட்டது. நிதி மசோதா நிறைவேற்றப்பட்டது.
2. வேளாண் மண்டலம் : சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி, துரைமுருகன் இடையே காரசார விவாதம்
வேளாண் மண்டலம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி, துரைமுருகன் இடையே காரசார விவாதம் நடைபெற்றது
3. சபாநாயகரின் அதிகாரங்களை நாடாளுமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மணிப்பூர் மந்திரிக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
மணிப்பூர் மந்திரிக்கு எதிரான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சபாநாயகரின் அதிகாரங்கள் குறித்து நாடாளுமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தீர்ப்பு அளித்து உள்ளது.
4. மர்ம நபர் உள்ளே நுழைய முயன்றதால் நாடாளுமன்றத்தில் பலத்த பாதுகாப்பு
மர்ம நபர் உள்ளே நுழைய முயன்றதால் நாடாளுமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
5. மராட்டிய விவகாரத்தால் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி -இரு அவைகளும் ஒத்திவைப்பு
மராட்டிய விவகாரத்தால் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.