கூட்டுறவு வங்கிகளில் உண்மையான விவசாயிக்கு கடன் இல்லை என்ற நிலை வராது - அமைச்சர் செல்லூர் ராஜூ


கூட்டுறவு வங்கிகளில் உண்மையான விவசாயிக்கு கடன் இல்லை என்ற நிலை வராது - அமைச்சர் செல்லூர் ராஜூ
x
தினத்தந்தி 18 Feb 2020 6:38 AM GMT (Updated: 18 Feb 2020 7:22 AM GMT)

கூட்டுறவு வங்கிகளில் உண்மையான விவசாயிக்கு கடன் இல்லை என்ற நிலை வராது என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

சென்னை

தமிழக சட்டப்பேரவையில் இன்று  பட்ஜெட் குறித்து 2 ஆம்  நாள் விவாதம் நடைபெற்று வருகிறது.

வங்கிகளில் மார்ச் மாதத்துடன் நகை கடன்கள் வழங்கப்படுவது நிறுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதால் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்படுவார்களே என்று சட்டசபையில் இன்று தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளிக்கையில் கூறியதாவது:-

விவசாயிகளுக்கு 4 ஆயிரத்து 432 கோடி ரூபாய் கடன் கொடுத்து தமிழக அரசு சாதனை புரிந்துள்ளது.

பணமதிப்பிழப்பு போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கூட்டுறவு வங்கிகள் தனது பணியை சிறப்பாக செயலாற்றியது.  கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு 11 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் உண்மையான விவசாயிகளுக்கு கடன் இல்லை என்ற நிலை வராது. வணிக வங்கிகளில் விவசாயத்துக்கு நகை கடன் என்று தவறாக கடன் கொடுப்பதை தடுக்கவே மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில்  உண்மையான விவசாயிகளுக்கு நகை கடன் தொடர்ந்து வழங்கப்படும்.

2011-ம் ஆண்டு முதல் 2,424 புதிய நியாய விலை கடைகள் திறக்கப்பட்டுள்ளன.  தமிழகத்தில் குறைந்த ரேஷன் கார்டு உள்ள பகுதிகளில், பகுதி நேர ரேஷன் கடைக்கு மாற்றாக நடமாடும் ரேஷன் கடைகள் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என கூறினார்.

Next Story