மாநில செய்திகள்

தவறான செய்தியை தொடர்ந்து கூறி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க திமுக முயற்சி - முதலமைச்சர் குற்றச்சாட்டு + "||" + Constantly telling the wrong message DMK's attempt to tarnish law and order in TamilNadu Chief Minister's charge

தவறான செய்தியை தொடர்ந்து கூறி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க திமுக முயற்சி - முதலமைச்சர் குற்றச்சாட்டு

தவறான செய்தியை தொடர்ந்து கூறி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க திமுக முயற்சி - முதலமைச்சர் குற்றச்சாட்டு
குடியுரிமை சட்டத்தால் தமிழ்நாட்டில் பிறந்த எந்த சிறுபான்மையினருக்கும் பாதிப்பில்லை என சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
சென்னை

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் மனோ தங்கராஜ், குடியுரிமைச் திருத்தச் சட்டத்தால் சிறுபான்மையின மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

குடியுரிமைச் சட்டத்தை திரும்ப பெறும் அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளது; தமிழக அரசிடம் இல்லை . மத்திய அரசுதான் முடிவெடுக்கும் சூழலில் உள்ளது; மத்திய அரசிடம் திமுக உறுப்பினர்கள் வலியுறுத்துங்கள். குடியுரிமை சட்டத்தால் தமிழ்நாட்டில் பிறந்த எந்த சிறுபான்மையினருக்கும் பாதிப்பில்லை.சிஏஏ சட்டத்தால் யார் பாதிக்கபட்டார்கள் என திமுக விளக்க வேண்டும்.

தொடர்ந்து பேசிய திமுக உறுப்பினர் மனோ தங்கராஜ், பாதிப்பு ஏற்படுவதால் தான் மற்ற மாநிலங்களில் இச்சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக கூறினார்.

அதற்கு பதிலளித்த முதலமைச்சர், சிஏஏ விவகாரத்தை சொல்லி சொல்லி மக்களை ஏமாற்றி தவறான தகவலை பரப்பி, அமைதியாக உள்ள தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

1. குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற திமுக கோரிக்கை - சபாநாயகர் மறுப்பு
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பேரவையில் விவாதிக்க முடியாது என சபாநாயகர் தனபால் மறுப்பு தெரிவித்து உள்ளார்.
2. தமிழக அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்
தமிழக அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும் என அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 9-ஆம் தேதி வரை நடைபெறும் -அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 9-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
4. தமிழக சட்டசபை ஜனவரி 6-ம் தேதி கூடுகிறது; அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழக சட்டசபை ஜனவரி 6-ம் தேதி கூடுகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
5. தமிழக சட்டசபை கூட்டம் ஜனவரி 6-ந் தேதி தொடங்க உள்ளதாக தகவல்
தமிழக சட்டசபை கூட்டம் ஜனவரி 6-ந் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.