மாநில செய்திகள்

டி.என்.பிஎஸ்.சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு - அமைச்சர் ஜெயக்குமார் + "||" + In the TNPSC Scam Relationship with former DMK ministers Minister Jayakumar

டி.என்.பிஎஸ்.சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு - அமைச்சர் ஜெயக்குமார்

டி.என்.பிஎஸ்.சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு - அமைச்சர் ஜெயக்குமார்
2006-2011 ஆம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை

சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 161-வது பிறந்தநாளையொட்டி இன்று  சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள அவரது உருவ சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்ட படத்துக்கு தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, மாஃபா பாண்டியராஜன், சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு உருவ படத்துக்கு மரியாதை செலுத்தினர்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார்  கூறியதாவது:-

சிங்காரவேலர் அவருக்கென்று ஒரு குறிக்கோள் வைத்து, அடக்கு முறையாளர்களுக்கு ஆதரவளிக்காமல் செயல்பட்டவர். சட்டம் பயின்று வழக்கறிஞராக இருந்த அவர், தீண்டாமையை எதிர்த்து போராட தனது உத்யோகத்தையும் துறந்துள்ளார் இந்தியாவில் முதன் முதலாக மே தினத்தை கொண்டாடிய மாபெரும் புரட்சியாளர் சிந்தனை சிற்பி சிங்காரவேலர்.

பன்முக சிந்தனையாளரான அவரது புகழை பரப்பும் பொருட்டே அவர் பெயரில் விருது வழங்கவும் அவருக்கென்று மணி மண்டபம் அமைக்கவும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு, அதனை தொடங்கியும் வைத்தார்.

திமுக ஆட்சி காலத்தில் 2006-2011 ஆம் ஆண்டு வரை மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் உதவி பல் மருத்துவர் ஆகிய பதவிகளுக்கான தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளது.  இதில் கே.என்.நேரு, அந்தியூர் செல்வராஜ், மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்துக்கு தொடர்பு உள்ளது., அவர்களின் பரிந்துரை கடிதங்கள் முறைகேடு தொடர்பான சோதனையின் போது அப்போதைய டிஎன்பிஎஸ்சி தலைவர் செல்லமுத்து வீட்டில் சிக்கி  உள்ளது.

இது தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில்  நிலுவையில் உள்ளது இந்த வழக்கு அடுத்த மாதம் 19-ஆம் தேதி விசாரணைக்கு வரும்போதும் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

பல ஊழல்களை செய்து ஊழல் கட்சியாக விளங்கும் தி.மு.க தற்போது சிறப்பாக செயல்பட்டு முறைகேடு செய்த 40 க்கும் மேற்பட்டோரை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வரும் சி.பி.சி.ஐ.டி விசாரணையை குறை கூறுவதோடு டி.என்.பி.எஸ்.சி மற்றும் அ.தி.மு.க அரசு மீது குற்றம்சாட்டி வருவது வேடிக்கையாக உள்ளது.

தேசிய மக்கள் தொகை பதிவேடு  மத்தியில் ஆட்சியிலிருந்தபோது காங்கிரஸ், திமுக ஆகியவையே கொண்டு வந்தது. அது தற்போது நடைமுறைக்கு வருகிறது.  

தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது.  ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் குறித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதியின் அவதூறு கருத்து திமுகவின் பண்பை காட்டுவதாக கூறினார்.