சட்டப்பேரவையில் முதலமைச்சர் - எதிர்க்கட்சித் துணைத்தலைவர் காரசார விவாதம்


சட்டப்பேரவையில் முதலமைச்சர் - எதிர்க்கட்சித் துணைத்தலைவர்  காரசார விவாதம்
x
தினத்தந்தி 19 Feb 2020 10:51 AM GMT (Updated: 19 Feb 2020 10:51 AM GMT)

சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி - எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

சென்னை

சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில்  பட்ஜெட் மீதான விவாதத்தின் போது  7 பேர் விடுதலை விவகாரத்தில் அரசு மெத்தனமாக இருப்பதாக  எதிர்க்கட்சித் துணைத்தலைவர்  துரைமுருகன் குறிப்பிட்டார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் சி.வி.சண்முகம்  7 பேர் விடுதலை விவகாரத்தில் இனி கவர்னர்  தான்  முடிவெடுக்க வேண்டும்; கவர்னரின் அதிகாரத்தில் தமிழக அரசு தலையிட முடியாது  என கூறினார்.

முதல்வர் பழனிசாமி கூறும் போது  7 பேர் விடுதலை தொடர்பாக  கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்  என கூறினார்.

துரைமுருகன் தமிழக அரசின் கடன் நான்கரை லட்சம் கோடி ரூபாயாக கொண்டு வந்திருக்கிறீர்களே; நாளை நாங்கள் ஆட்சிக்கு வரும்போது எங்கள் தலைவர் என்ன செய்வார் என கவலைப்படுகிறோம் என கூறினார் 

முதல்வர் பழனிசாமி  உங்களுக்கு அந்த கவலை தேவையில்லை. அப்படி ஒரு  நிலை வராது என பதில் அளித்தார்.

Next Story