மாநில செய்திகள்

சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு கப்பலில் வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை + "||" + For those who sailed from China to the port of Chennai Corona is not affected

சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு கப்பலில் வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை

சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு  கப்பலில்  வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை
சீனாவில் இருந்து சென்னை வந்த கப்பலில் உள்ள 19 பேரில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டது. ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது.
சென்னை

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2,000ஆக உயர்ந்து உள்ளது. ஒரே நாளில் 132 பேர் உயிரிழந்து உள்ளனர்.

சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு கப்பலில் வந்த 19 பேரை சோதனை செய்ததில் 2 பேருக்கு லேசான காய்ச்சல்  அறிகுறி இருப்பது தெரியவந்தது.  ஆனால் அவர்களுக்கு மூச்சு திணறல் இல்லை. இதை தொடர்ந்து அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என தகவல் வெளியானது. 

கொரோனா அறிகுறிகளுடன் வந்தவர்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கபட்டு வந்தனர்.  இந்த நிலையில்  2 பேரின் ரத்த மாதிரியை சோதனை செய்ததில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரியவந்து உள்ளது.

2 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது என சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 21 நாள் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் எதுவும் இல்லை - மத்திய அரசு
21 நாள் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா தெரிவித்து உள்ளார்.
2. 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
'மனதின் குரல்' நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
3. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசிக்க கர்நாடகாவில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்
கர்நாடகத்தில் கொரோனா வைரசை தடுப்பது பற்றி ஆலோசிக்க பெங்களூருவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற இருப்பதாக முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்து உள்ளார்.
4. உலக அளவில் கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்ததால் சோகம்
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோர தாண்டவம் ஆடி வருகிறது.
5. கொரோனா வைரஸ் தாக்கி மரண படுக்கையில் ‘பேஸ்புக்’கில் பதிவிட்ட ‘டி.ஜே.’ டேனி சர்மா - உருக்கமான தகவல்கள்
கொரோனா தாக்கி மரண படுக்கையில் இருந்த போது டி.ஜே. டேனி சர்மா, ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவுகள் தெரிய வந்துள்ளன.