மாநில செய்திகள்

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து - 3 பேர் பலி + "||" + The accident on the sets of Indian 2 - 3 killed

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து - 3 பேர் பலி

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து - 3 பேர் பலி
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விபத்து ஏற்பட்டத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
சென்னை,

லைகா நிறுவனம் தயாரிப்பில் சங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த திரைப்படத்திற்காக சென்னை அருகே பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள தனியார் படப்பிடிப்பு தளத்தில் ராட்சத கிரேன்கள் மூலம் பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று செட் அமைக்கும் பணிகள் நடைபெற்ற போது எதிர்பாராத விதமாக கிரேன் அறுந்து விபத்து ஏற்பட்டதில் உதவி இயக்குனர் மது, சங்கரின் இணை இயக்குனர் கிருஷ்ணா, உதவி நடன இயக்குனர் சந்திரன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

இதனையடுத்து காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்த காவல்துறையினர், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நாமக்கல் அருகே லாரி-கார் மோதி கோர விபத்து: பலியான 6 பேர் அடையாளம் தெரிந்தது பரபரப்பு தகவல்கள்
நாமக்கல் அருகே லாரி-கார் மோதிய விபத்தில் பலியான 6 பேர் அடையாளம் தெரியவந்தது.
2. பாகிஸ்தானில் போர் விமானம் விழுந்து நொறுங்கியது: விமானப்படை வீரர் பலி
பாகிஸ்தானில் குடியரசு தினவிழாவுக்கான ஒத்திகையின்போது எப்-16 ரக போர் விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் விமானப்படை வீரர் ஒருவர் பலியானார்.
3. கர்நாடகாவில் 2 கார்கள் மோதி கோர விபத்து: தமிழக பக்தர்கள் 10 பேர் பலி
கர்நாடகாவில் 2 கார்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் தமிழக பக்தர்கள் 10 பேர் உள்பட 13 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.
4. இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: நடிகை காஜல் அகர்வாலுக்கு நோட்டீஸ் அனுப்ப போலீசார் ஆலோசனை
இந்தியன்-2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தொடர்பான விசாரணைக்கு ஆஜராக, நடிகை காஜல் அகர்வாலுக்கு நோட்டீஸ் அனுப்ப போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.
5. நைஜீரியா: பயணிகளை ஏற்றிச் சென்ற லாரி பள்ளத்தில் உருண்டு விபத்து - 9 பேர் பலி, 5 பேர் காயம்
நைஜீரியாவின் பயணிகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று தாறுமாறாக ஓடி பள்ளத்தில் உருண்ட விபத்தில் சிக்கி 9 பேர் பலியாகினர். மேலும் 5 பேர் காயம் அடைந்தனர்.