பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றக்கூடிய சட்ட முன்வடிவு இன்று சட்டமன்றத்தில் தாக்கலானது


பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றக்கூடிய சட்ட முன்வடிவு இன்று சட்டமன்றத்தில் தாக்கலானது
x
தினத்தந்தி 20 Feb 2020 7:29 AM GMT (Updated: 20 Feb 2020 10:04 AM GMT)

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றக்கூடிய சட்ட முன்வடிவு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை

பாதுகாக்கப்பட்ட காவிரி டெல்டா வேளாண் மண்டல சட்ட மசோதா முன்வடிவு இன்று பேரவையில் தாக்கலானது.  தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மேம்படுத்துதல் மசோதாவை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி  சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி  பேசும் போது  வேளாண் மண்டல மசோதா தாக்கல் செய்வது பெருமையாக உள்ளது என கூறினார்.

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* தஞ்சாவூர், திருவாரூர், நாகை,கடலூர் மாவட்டங்களில் வேளாண் பாதுகாப்பு மண்டலத்தில் வரும்.

* இந்த சட்டத்தை மீறி தடை செய்யப்பட்ட தொழில்கள் தொடங்கினால் அதிகபட்சமாக 5 ஆண்டுகளும், குறைந்த பட்சமாக 6 மாதங்களும் தண்டனை வழங்கப்படும்.ரூ.50 லட்சம் அபராத தொகை விதிக்கப்படும்

* தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டு அதிகார அமைப்பு' உருவாக்கப்படும் இந்த அதிகார அமைப்பு முதலமைச்சர் தலைமையில் செயல்படும்.

* துறைமுகம் , குழாய் இணைப்பு, சாலை, தொலைதொடர்புகள், மின்சாரம், நீர் வினியோகம் போன்ற உள்கட்டமைப்பு பாதிக்கலாகாது.

* ஹைட்ரோகார்பன், மீத்தேன், மென்களிக்கல் உள்ளிட்ட இயற்கை எரிவாயுக்களின் ஆய்வு, துளைத்தல் மற்றும் பிரித்தெடுத்தலுக்கு தடை

* சதுத்தநாக உருக்காலை, இரும்புத்தாது செயல்முறை ஆலைகளுக்கு தடை 
விதிக்கப்படுகிறது

* கப்பல் உடைக்கும் தொழிற்சாலை ஆகியவற்றிற்கு  தடை விதிக்கப்படுகிறது

* ஒருங்கிணைந்த எஃகு ஆலை அல்லது இலகு இரும்பு உருக்காலை, செம்பு உருக்காலை, அலுமினிய உருக்காலைகளுக்கு தடை

* விலங்குகளின் உடல் பாகங்களை பதப்படுத்துதல், தோல் பதனிடுதல் தொழிற்சாலைகளுக்கு தடை

* இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த தேதிக்கு முன்னர் செயல்பாட்டில் உள்ள செயல்கள் அல்லது திட்டங்களை பாதித்தலாகாது.

* அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், மணமேல்குடி, திருவரங்குளம், கரம்பக்குடி வட்டாரங்களுக்கு இந்த தடை பொருந்தும்

* காட்டுமன்னார்கோவில், மேல் புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குமாராட்சி வட்டாரங்களுக்கு தடை பொருந்தும்.

Next Story