பொறுப்புணர்வோடு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை, தவறாக பரப்பக்கூடாது- ஓ.பன்னீர் செல்வம்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 20 Feb 2020 8:30 AM GMT (Updated: 20 Feb 2020 8:30 AM GMT)

பொறுப்புணர்வோடு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை தவறாக பரப்பக்கூடாது என சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

சென்னை

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில்  சட்டப்பேரவையில் படஜெட் மீதான விவாத்தின் மீது  நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலுரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- 

10-வது முறை, நிதி அமைச்சராக பதிலுரை வழங்குவதை பெருமையாக கருதுகிறேன்.

சிலர், தற்போது தாக்கல் செய்துள்ள பட்ஜெட் மீது விமர்சனம் செய்கிறார்கள். ஆனால் இது மக்களுக்கான பட்ஜெட். இதனை மக்களும், நேர்மையான பத்திரிகைகளும் பாராட்டி உள்ளார்கள்"

அரசின் நிலைமை வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையற்ற கவர்ச்சி திட்டங்களை கொண்டு வரும் அரசு அல்ல இது. பொறுப்புணர்வோடு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை, தவறாக பரப்பக்கூடாது.

சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் வராது, வரவும் விடமாட்டோம். மதுரை எய்மஸ் மருத்துவமனைக்கு வரைபடம் தயார் செய்யப்பட்டு வருகிறது; விமான நிலைய விரிவாக்கத்திற்கும் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

நல்ல கருத்துகள், ஆக்கபூர்வமான கருத்து பரிமாற்றங்களை அளித்த எதிர்க்கட்சி மற்றும் ஏனைய கட்சி உறுப்பினர்களுக்கு நன்றி  என கூறினார்.

Next Story