தாய், தாய்நாடு, தாய்மொழி ஆகியவற்றை ஒரு போதும் மறக்கக் கூடாது - குடியரசு துணைத்தலைவர் பேச்சு


தாய், தாய்நாடு, தாய்மொழி ஆகியவற்றை ஒரு போதும் மறக்கக் கூடாது - குடியரசு துணைத்தலைவர் பேச்சு
x
தினத்தந்தி 21 Feb 2020 1:23 PM GMT (Updated: 21 Feb 2020 1:23 PM GMT)

தாய், தாய்நாடு, தாய்மொழி ஆகியவற்றை ஒரு போதும் மறக்கக் கூடாது என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

கோவை,

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில், வெளிநாடுகளின் தலையீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். 

கோவை பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு பேசியதாவது:-

சிஏஏ குறித்து தெரிந்து கொள்ளாமலேயே, சிலர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் ஆன காஷ்மீர் விவகாரம், குடியுரிமை திருத்த சட்டம் போன்றவற்றை சில மேற்கத்திய நாடுகள் விவாதிக்க விரும்புகின்றன. ஆனால் உள்நாட்டு விவகாரத்தில், வெளிநாடுகளின் தலையீட்டை அனுமதிக்கமாட்டோம்.

நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் 100 சதவீத கல்வியறிவு பெற முடியவில்லை. விவாத கலாசாரத்தை தான் இந்திய அரசியலமைப்பு சட்டம் ஊக்குவிக்கிறது. அதைத்தான் மத்திய அரசும் விரும்புகிறது. 

குடியுரிமை இந்திய மக்களுக்கு எதிரானது அல்ல என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த சட்டம், இந்திய குடியுரிமையை எதுவும் செய்யாது. தாய், தாய்நாடு, தாய்மொழி ஆகியவற்றை ஒரு போதும் மறக்கக் கூடாது.  எத்தனை மொழி கற்றாலும் தாய்மொழியை மட்டும் மறந்துவிடக்கூடாது. 

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story