புதுச்சேரியில் பால் தட்டுப்பாடு 55 ஆயிரம் லிட்டர் பால் தாருங்கள் - தமிழக அரசிடம் கோரிக்கை


புதுச்சேரியில் பால் தட்டுப்பாடு 55 ஆயிரம் லிட்டர் பால் தாருங்கள் - தமிழக அரசிடம் கோரிக்கை
x
தினத்தந்தி 22 Feb 2020 5:30 AM GMT (Updated: 22 Feb 2020 5:30 AM GMT)

புதுச்சேரியில் பால் தட்டுப்பாடு காரணமாக 55 ஆயிரம் லிட்டர் பால் வழங்குமாறு தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னை,                                                                    

புதுவையில் நாள்தோறும் அரசின் சார்பு நிறுவனமான பாண்லே மூலம் சுமார் ஒரு லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்யப்பட்டு வந்தது. இதில் சுமார் 45 ஆயிரம் லிட்டர் பால் மட்டுமே உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்டது. மீதி பால் வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் சமீப காலமாக வெளிமாநிலங்களில் இருந்து போதுமான அளவுக்கு பால் கிடைக்கவில்லை. இதனால் புதுவையில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நிலைமையை சமாளிக்க தமிழகத்தில் இருந்து கூடுதலாக பால் வாங்க புதுவை அரசு முடிவு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து புதுவை அமைச்சர் கந்தசாமி சென்னையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை சந்தித்து பேசினார்.

அப்போது புதுவை மக்களின் தேவைக்காக 55 ஆயிரம் லிட்டர் பால் வழங்குமாறு கோரிக்கை வைத்தார். அதனை பரிசீலனை செய்வதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் உறுதியளித்தார்.

Next Story