தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு


தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு
x
தினத்தந்தி 22 Feb 2020 11:35 AM GMT (Updated: 22 Feb 2020 11:35 AM GMT)

தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து ரூ.32 ஆயிரத்து 576க்கு இன்று விற்பனையாகிறது.

சென்னை,

தங்கத்தின் விலை புது வருடம் பிறந்த பின்னர் தொடர்ந்து உச்சம் கண்டு வந்தது.  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விலை தொடர்ந்து உயர்ந்ததால், அந்த மாதம் 4ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.30 ஆயிரத்தை கடந்தது. அப்போது ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்து 104க்கு விற்பனை ஆனது. அதன் பிறகு, சற்று விலை குறைய தொடங்கி, ஒரு பவுன் ரூ.28 ஆயிரம் முதல் ரூ.29 ஆயிரத்துக்குள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

கடந்த ஜனவரி 1ந்தேதி ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 735க்கும், ஒரு பவுன் ரூ.29 ஆயிரத்து 880க்கும் விற்பனை ஆனது.  கடந்த ஜனவரி 3ந்தேதி மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.80ம், பவுனுக்கு ரூ.640ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 815க்கும், ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்து 520க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை கடந்த செப்டம்பர் மாதம் ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத உச்சத்தில் இருந்தது.  இதன்பின் மீண்டும் ரூ.30 ஆயிரத்தை கடந்து, புதிய வரலாறு படைத்தது.  கடந்த ஜனவரி 8ந்தேதி ரூ.31 ஆயிரத்து 432க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதன்பின் ஜனவரி 14ந்தேதி இதன் விலை சற்றே குறைந்து ரூ.30 ஆயிரத்து 112க்கு விற்பனையானது.  இதன்பின்பு தொடர்ந்து விலை உயர்ந்து கொண்டே சென்றது.  இதன்படி, கடந்த பிப்ரவரி 8ந்தேதி ரூ.31 ஆயிரத்து 184க்கும், பிப்ரவரி 20ந்தேதி ரூ.31 ஆயிரத்து 840க்கும், பிப்ரவரி 21ந்தேதி ரூ.32 ஆயிரத்து 96க்கும் விற்பனையானது.  தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்து ரூ.32 ஆயிரத்து 576க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Next Story