சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு


சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு
x
தினத்தந்தி 23 Feb 2020 2:12 AM GMT (Updated: 23 Feb 2020 2:12 AM GMT)

சென்னையில் பெட்ரோல் விலை 8 காசுகள் உயர்ந்துள்ளது, டீசல் விலை 5 காசுகள் உயர்ந்துள்ளது.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

அதன்படி நேற்று சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.74.73 ஆகவும், டீசல், விலை ஒரு லிட்டர் ரூ.68.27 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 8 காசுகள்உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.74.81 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.68.32 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Next Story