மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த அ.ம.மு.க.வினர்


மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த அ.ம.மு.க.வினர்
x
தினத்தந்தி 24 Feb 2020 9:30 PM GMT (Updated: 24 Feb 2020 7:46 PM GMT)

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.ம.மு.க.வினர் 20-க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர். தி.மு.க. தலைமைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சென்னை கிழக்கு மாவட்டம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அம்மா பேரவை வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.காதர்மீரான் தலைமையில் மாணவர் அணி மாவட்ட செயலாளர் வி.பாலாஜி, அமைப்பு சாரா மாவட்டத் தலைவர் எஸ்.குமரகுரு, மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் வி.கிருஷ்ணன்குமார், அம்மா பேரவை எழும்பூர் பகுதி செயலாளர் எம்.முத்து, திரு.வி.க. நகர் தொகுதி, பகுதி துணைச்செயலாளர் எஸ்.பக்ருதீன், எழும்பூர் பகுதி இளைஞர் அணி இணைச் செயலாளர் ஒய்.யூனூஸ் மற்றும் என்.கணேஷ், எஸ்.சேக்ஒளி, இம்ரான்கான், முகமதசகூர், அலாவுதீன், ஷாஜகான் உசேன், சலீம், தமிழ், ரபீக், அண்ட்ரோஸ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

அப்போது, மத்திய சென்னை தொகுதி தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story