டெல்லி வன்முறை : மத்திய அரசுக்கு ரஜினிகாந்த் கண்டனம்; நண்பருக்கு சபாஷ் - கமல்ஹாசன் டுவிட்


டெல்லி வன்முறை : மத்திய அரசுக்கு ரஜினிகாந்த் கண்டனம்;  நண்பருக்கு சபாஷ் - கமல்ஹாசன் டுவிட்
x
தினத்தந்தி 26 Feb 2020 3:29 PM GMT (Updated: 2020-02-26T20:59:26+05:30)

டெல்லியில் வன்முறையை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டிக்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறினார். இதற்கு சபாஷ் நண்பர் ரஜினிகாந்த் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னை,

வட கிழக்கு டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிரானவர்கள் ஆகிய இரு பிரிவினருக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதில் தற்போதைய நிலவரப்படி 24 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து போயஸ் கார்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினிகாந்த், டெல்லியில் நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டதை கட்டுப்படுத்தாதது மத்திய உளவுத்துறையின் தோல்வியை காண்பிக்கிறது என்றும் இதற்காக மத்திய அரசை கண்டிக்கிறேன்.

இது போன்ற போராட்டங்களை மத்திய மாநில அரசுகள் ஆரம்பித்திலேயே கிள்ளி எறிய வேண்டும். டெல்லி வன்முறையை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும், வன்முறையை அடைக்க முடியவில்லை என்றால் பதவி விலகுங்கள்' என கூறியுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில்,

சபாஷ் நண்பர் ரஜினிகாந்த் அவர்களே, அப்படி வாங்க.  இந்த வழி நல்ல வழி.  தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை வருக, வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

Next Story