மாநில செய்திகள்

மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 25 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி - எடப்பாடி பழனிசாமி உத்தரவு + "||" + Rs. 3 Lakhs for families of 25 people who died of electrocution and snake bites - Edappadi Palanisamy

மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 25 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி - எடப்பாடி பழனிசாமி உத்தரவு

மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 25 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி - எடப்பாடி பழனிசாமி உத்தரவு
மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 25 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை, 

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், அரங்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்த நடராஜ் என்பவரது மகன் ஆறுமுகம் டிரான்ஸ்பார்மர் அருகே நடந்து சென்றபோது, இரும்பு கம்பி டிரான்ஸ்பார்மர் மீது உரசியதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த அருள்முகன் பாம்பு கடித்து இறந்தார்.

இவர்கள் தவிர தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மின்சாரம் தாக்கி 23 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். இவர்கள் அனைவரின் குடும்பத்துக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த 25 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மின்சாரம் தாக்கி பலியான என்ஜினீயரிங் மாணவர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
தென்காசி அருகே மின்சாரம் தாக்கி பலியான என்ஜினீயரிங் மாணவர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
2. தென்காசி அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் என்ஜினீயரிங் மாணவர் மின்சாரம் தாக்கி சாவு
தென்காசி அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. ஊராட்சி மன்ற தலைவர் குடும்பத்துக்கு தி.மு.க. சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி
ஊராட்சி மன்ற தலைவர் குடும்பத்துக்கு தி.மு.க. சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி.
4. வீட்டு குளியலறையில் பதுங்கியிருந்த கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது 35 குட்டிகளை ஈன்றதால் பரபரப்பு
கோவை சாய்பாபா காலனியில் வீட்டு குளியலறையில் பதுங்கி இருந்த கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு சிக்கியது. அது பிடிபட்டதும் 35 குட்டிகளை ஈன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. கொரோனா தடுப்பு நடவடிக்கை; நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி
நடிகர் ராகவா லாரன்ஸ் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.3 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.