சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை குறைவு


சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை குறைவு
x
தினத்தந்தி 27 Feb 2020 3:19 AM GMT (Updated: 27 Feb 2020 3:19 AM GMT)

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 காசுகள் குறைந்துள்ளது.

சென்னை, 

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

அதன்படி, இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 6 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.74.75ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.68.27ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Next Story