மாநில செய்திகள்

68-வது பிறந்தநாள்: மு.க.ஸ்டாலினுக்கு, ராகுல்காந்தி வாழ்த்து - நலத்திட்ட உதவிகள் வழங்கி தி.மு.க.வினர் கொண்டாடினர் + "||" + 68th Birthday: DMK celebrates MK Stalin with Rahul Gandhi's greeting

68-வது பிறந்தநாள்: மு.க.ஸ்டாலினுக்கு, ராகுல்காந்தி வாழ்த்து - நலத்திட்ட உதவிகள் வழங்கி தி.மு.க.வினர் கொண்டாடினர்

68-வது பிறந்தநாள்: மு.க.ஸ்டாலினுக்கு, ராகுல்காந்தி வாழ்த்து - நலத்திட்ட உதவிகள் வழங்கி தி.மு.க.வினர் கொண்டாடினர்
மு.க.ஸ்டாலினின் 68-வது பிறந்தநாளையொட்டி, ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்து உள்ளார். நலத்திட்ட உதவிகள் வழங்கி அவரது பிறந்தநாளை தி.மு.க.வினர் கொண்டாடினர்.
சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று 68-வது பிறந்தநாள் ஆகும். ஆனால் அவர் தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை. இதுதொடர்பாக தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் எழுதியிருந்த கடித வடிவிலான அறிக்கையில், ‘தி.மு.க. பொதுச்செயலாளரும், எனது பெரியப்பாவுமான க.அன்பழகன் வயது முதிர்வின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல் நலிவுற்று இருக்கும் இந்த சூழலில் நான் எனது பிறந்தநாளை கொண்டாடும் மனநிலையில் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனவே, கட்சியின் முன்னணி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் என் மீது அன்பு கொண்ட நண்பர்கள் யாரும் மார்ச் 1-ந் தேதி (நேற்று) என்னை நேரில் சந்தித்து வாழ்த்துச் சொல்ல வரவேண்டாம்’ என்று கூறி இருந்தார்.

எனினும் தி.மு.க. தொண்டர்கள் தன் மீதான பாசம் காரணமாக வாழ்த்து சொல்ல வரலாம் என்று கருதிய மு.க.ஸ்டாலின் நேற்று தனது வீட்டில் இல்லை. அவர் வெளியூர் சென்றுவிட்டார். கடந்த ஆண்டு கருணாநிதி மறைந்து ஓராண்டு நிறைவடையாததால், மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை என்றாலும் தி.மு.க.வினர் அவருடைய பிறந்தநாளை இளைஞர் எழுச்சிநாளாக உற்சாகமாக கொண்டாடினர். ‘கேக்’ வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அன்னதானம், ரத்ததானம் முகாம், இளைஞர்களுக்கு விளையாட்டு போட்டிகள் போன்றவற்றை நடத்தினர்.

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் எப்போதும் மகிழ்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ இறைவன் அவரை ஆசிர்வதிக்கட்டும்” என்று கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் டுவிட்டரில் வெளியிட்ட வாழ்த்துச்செய்தியில், ‘அன்பு சகோதரர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். தமிழகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகவும், மக்களுக்காகவும் உங்கள் குரல் இன்னும் நிறைய நாட்கள் ஒலித்திட என் மனமார்ந்த வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலரும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பிறந்தநாள் வாழ்த்து தொண்டர்களை சந்திப்பதை தவிர்த்த ரங்கசாமி
கொரோனா அச்சுறுத்தலையொட்டி பிறந்தநாள் வாழ்த்து கூற வந்த தொண்டர்களை சந்திப்பதை ரங்கசாமி தவிர்த்தார்.
2. தமிழகம் முழுவதும் திமுகவினர் கறுப்புக்கொடி ஏந்தி கண்டன முழக்க போராட்டம்
தமிழக அரசு மின் கட்டணக் கொள்ளையடிப்பதாகக் கூறி, அதிமுக அரசைக் கண்டித்து கறுப்புக் கொடியேந்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டன முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. திமுகவை இந்து விரோதி என சித்தரிக்க முயற்சி நடக்கிறது - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
திமுகவை இந்து விரோத கட்சியாக சித்தரிக்க முயற்சி நடப்பதாக அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
4. கொரோனா காலத்தில் மு.க.ஸ்டாலின் ஆக்கப்பூர்வமான அறிக்கை எதுவும் கொடுக்கவில்லை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி
கொரோனா காலத்தில் அதை தடுக்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆக்கப்பூர்வமான அறிக்கைகள் எதுவும் கொடுக்கவில்லை என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.
5. மேட்டூர் அணையை 12-ந்தேதியே திறந்தும் கடை மடைப்பகுதிக்கு காவிரி நீர் போய் சேராதது கவலை அளிக்கிறது மு.க.ஸ்டாலின் அறிக்கை
மேட்டூர் அணையை கடந்த 12-ந்தேதியே திறந்தும் கடை மடைப்பகுதிக்கு இன்னும் காவிரி நீர் போய் சேராதது கவலை அளிப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.