பூமி கண்காணிப்பு செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது


பூமி கண்காணிப்பு செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது
x
தினத்தந்தி 4 March 2020 5:00 AM IST (Updated: 4 March 2020 4:59 AM IST)
t-max-icont-min-icon

ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் பூமி கண்காணிப்பு செயற்கைகோளுடன் நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

சென்னை, 

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்(இஸ்ரோ), பூமி கண்காணிப்புக்காக ஜிசாட்-1 என்ற செயற்கைகோளை தயாரித்துள்ளது. இது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி-எப்10 என்ற ராக்கெட் மூலம் நாளை(வியாழக்கிழமை) மாலை 5.43 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

இதற்கான இறுதிக்கட்ட பணியான கவுண்ட்டவுன் இன்று(புதன்கிழமை) பகல் 3 மணி அளவில் தொடங்க இருக்கிறது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருள் நிரப்பப்பட்ட பகுதிகளில் கசிவுகள் ஏதேனும் இருக்கிறதா? என்பதையும் தீவிரமாக கண்காணிக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். மேற்கண்ட தகவலை இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story