கள்ளக்குறிச்சி, அரியலூர் புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு
கள்ளக்குறிச்சி, அரியலூர் புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 24 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில், 3,350 எம்.பி.பி.எஸ். இடங்கள் இருக்கின்றன. திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர் ஆகிய 9 இடங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது.
அதையடுத்து தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களான அரியலூர், காஞ்சீபுரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகியவற்றிலும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து அண்மையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், புதிதாக அமைக்க உள்ள கள்ளக்குறிச்சி, அரியலூர் புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில் கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரிக்கு ரூ.382 கோடியும், அரியலூர்மருத்துவக் கல்லூரிக்கு ரூ.347 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் ராமநாதபுரம், விருதுநகரில் 2 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story