தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 4 பேர் இடமாற்றம்
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 4 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை,
தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தொழில் மற்றும் வர்த்தக கூடுதல் ஆணையர் டி.பி.ராஜேஷ், சுற்றுலா ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குனராகவும் அவர் பணியாற்றுவார்.
ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சித்துறை சிறப்புச் செயலாளர் ஏ.சுகந்தி, விடுமுறையில் இருந்து திரும்பியதை தொடர்ந்து எழுதுபொருள் அச்சுத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் மூத்த துணை ஆணையர் சந்தீப் சக்சேனா மாநில அரசு பணிகளுக்கு திரும்பியதை தொடர்ந்து சுற்றுலா, கலாசாரம் மற்றும் இந்துசமய அறநிலையத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலா இயக்குனர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குனருமான வி.அமுதவல்லி, தமிழ்நாடு உப்பு கழகத்தின் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story