வங்கி மோசடி வழக்கு: அதிமுக முன்னாள் எம்.பிக்கு 7 ஆண்டுகள் சிறை


வங்கி மோசடி வழக்கு: அதிமுக முன்னாள் எம்.பிக்கு  7 ஆண்டுகள் சிறை
x
தினத்தந்தி 4 March 2020 12:02 PM GMT (Updated: 4 March 2020 12:02 PM GMT)

கடன் மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் எம்.பி. ராமச்சந்திரன் உள்ளிட்ட 3 பேர் குற்றவாளி என தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்றம், அவருக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனையும் ஒரு கோடியே 11 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

சென்னை

கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலரான அதிமுக முன்னாள் எம்.பி ராமச்சந்திரன், அதன் கீழ் இயங்கும் சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரியை விரிவாக்கம் செய்தவதற்காக சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 20 கோடி ரூபாய் கடன்பெற்றுள்ளார்.

இதற்காக வங்கி மேலாளர் தியாகராஜன் குடும்பத்துடன் அமெரிக்கா சென்று வர 2 லட்சத்து 69 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக கொடுத்துள்ளார். இது தொடர்பாக 2015ம் ஆண்டில் பதிவு செய்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் முன்னாள் எம்.பி ராமச்சந்திரன் அவரது மகன் மற்றும் வங்கி மேலாளர் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார்.

முன்னாள் எம்.பி. ராமச்சந்திரன் 7 ஆண்டுகள் சிறைதண்டனையும் ஒரு கோடியே 11 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ராமச்சந்திரனின் மகன் ராஜசேகருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.   வங்கி மேலாளருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

Next Story