மலேசியா, சார்ஜாவிலிருந்து, திருச்சி வந்த 2 வயது குழந்தை உட்பட 3 பேர் கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதி

மலேசியா, சார்ஜாவிலிருந்து, திருச்சி வந்த 2 வயது குழந்தை உட்பட 3 பேர் கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதி
x

மலேசியா மற்றும் சார்ஜாவிலிருந்து, திருச்சிக்கு வந்த விமானத்தில் காய்ச்சலுடன் வந்த 2 வயது குழந்தை உட்பட 3 பேர், திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

திருச்சி,

மலேசியா மற்றும் சார்ஜாவிலிருந்து, திருச்சிக்கு வந்த விமானத்தில் காய்ச்சலுடன் வந்த 2 வயது குழந்தை உட்பட 3 பேர், திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக விமான பயணிகளிடம் நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் கோவில்பட்டி, சேலம் பகுதிகளை சேர்ந்த 2 பயணிகளுக்கும், ராமநாதபுரத்தை சேர்ந்த 2 வயது குழந்தைக்கும் சளி, காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

மருத்துவர்களின் முதற்கட்ட பரிசோதனையில், அவர்களுக்கு சாதாரண காய்ச்சல் உள்ளது தெரியவந்தபோதும், கொரோனா பாதிப்பு உள்ளதா? என தொடர்ந்து கண்காணித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story