ஜெகன்மோகன் ரெட்டியுடன் தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி ஜெயக்குமார் சந்திப்பு
ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி ஜெயக்குமார் சந்தித்து பேசினர்.
ஐதராபாத்,
கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு முதன் முதலாக ஒரே தவணையில் 6 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீரை ஆந்திரா அரசு வழங்கி உள்ளது.
மேலும் கண்டலேறு அணையில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் பூண்டி ஏரிக்கு கூடுதலாக கிருஷ்ண தண்ணீர் திறக்க வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திரா அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி இருந்தனர்.
இந்த நிலையில் கூடுதலாக கிருஷ்ணா நீர் பெறுவது தொடர்பாக ஆந்திர முதல்-மந்திரியை சந்திக்க அமைச்சர்கள் எஸ்.பி.வேலு மணி, ஜெயக்குமார் ஆகியோர் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஆந்திரா சென்றனர்.
இந்நிலையில் ,சென்னை குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதியில் இருந்து கூடுதலாக நீர் திறக்க ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியிடம் தமிழக அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார் நேரில் வலியுறுத்தினர். மேலும் கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் அளித்த கடிதத்தையும் ஆந்திர முதல்-மந்திரியிடம் வழங்கினர். சென்னை குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதியிலிருந்து கூடுதல் நீர் திறக்கவும் ஆந்திர முதல்-மந்திரியிடம் வலியுறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story