மு.க.ஸ்டாலினுக்கு எதிரான 3 அவதூறு வழக்குகள் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றம் - செசன்சு கோர்ட்டு உத்தரவு
மு.க.ஸ்டாலினுக்கு எதிரான 3 அவதூறு வழக்குகளை சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றம் செய்து செசன்சு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தி.மு.க. மகளிர் அணியினர் நடத்திய கோலம் போடும் போராட்டம் தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து அவர் மீது தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
அதேபோல, முதல்-அமைச்சர் குறித்தும், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்தும் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்து பேட்டி கொடுத்தார். இதையடுத்து அவர் மீது தனித்தனியாக இரு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த 3 வழக்குகளின் விசாரணை சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் நீதிபதி செல்வக்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்குகளின் விசாரணைக்காக மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராகவேண்டும் என்று ஏற்கனவே நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
அதே நேரம், இந்த வழக்குகளை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால், சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் 3 அவதூறு வழக்குகளின் விசாரணைக்காக மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராகவில்லை.
மு.க.ஸ்டாலின் சார்பில் அவரது வக்கீல் பி.குமரேசன் ஆஜராகி, நேரில் ஆஜராக ஸ்டாலினுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி செல்வக்குமார், இந்த வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றுவதாக கூறி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story