தமிழக‌ அரசின் நடவடிக்கையால் உயர் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது - முதலமைச்சர் பழனிசாமி


தமிழக‌ அரசின் நடவடிக்கையால் உயர் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது - முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 5 March 2020 10:10 AM IST (Updated: 5 March 2020 10:10 AM IST)
t-max-icont-min-icon

தமிழக‌ அரசின் நடவடிக்கையால் உயர் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

நாமக்கல்,

நாமக்கல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ரூ.338 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை அமைய உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடக்கிறது. மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுவதற்காக முதலமைச்சர் பழனிசாமி நாமக்கல் சென்றார்.

முன்னதாக சேந்தமங்கலத்தில் உயர்கல்வித் துறை சார்பில் ரூ.7 கோடியே 98 லட்சம் மதிப்பீட்டில் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ள பெரியார் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாமக்கல் சேந்தமங்கலத்தில் உயர்கல்வித் துறை சார்பில் பிரமாண்டமாக கட்டப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி தமிழக‌ அரசின் நடவடிக்கையால் உயர் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் தமிழகத்தில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் துறை கல்வித்துறைதான் என்றும் கூறினார். 

இந்த விழாவில் அமைச்சர் தங்கமணி, அமைச்சர் டாக்டர் சரோஜா, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், அமைச்சர் செங்கோட்டையன், நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் ஆகியோர் பங்கேற்றனர். 

Next Story