24 மணி நேர கொரோனா உதவி எண்களை அறிவித்தது தமிழக அரசு


24 மணி நேர கொரோனா உதவி எண்களை அறிவித்தது தமிழக அரசு
x
தினத்தந்தி 5 March 2020 6:53 PM IST (Updated: 5 March 2020 6:53 PM IST)
t-max-icont-min-icon

24 மணி நேர கொரோனா உதவி எண்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

சீனாவை அச்சுறுத்தி வந்த கரோனா வைரஸ் நோய்த் தொற்று, தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனாவைத் தவிர்த்து தென் கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளும் தற்போது கொரோனா வைரஸ்  தொற்றால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் இதுவரை 30 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதாக நாடு முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தை பிரதமர் மற்றும் ஜனாதிபதி அலுவலகம் ரத்து செய்துள்ளது.

இந்நிலையில்  24 மணி நேர கொரோனா உதவி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. 

044-29510400

044-29510500

94443 40496

87544 48477

கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்தால் மேற்காணும் தொலைபேசி எண்களில்  பொதுமக்கள் தொடர்புக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு மருத்துவ குழு உங்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? என்று பரிசோதித்து நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டுமா? என்று தீர்மானிப்பார்கள்.

இதேபோல மராட்டிய அரசும் கொரோனா வைரசுக்கு  பிரத்யேக உதவி எண்ணை '020-26127394' அறிமுகப்படுத்தி உள்ளது.

Next Story