கமல்ஹாசனுடன், முஸ்லிம் அமைப்பு பிரதிநிதிகள் சந்திப்பு


கமல்ஹாசனுடன், முஸ்லிம் அமைப்பு பிரதிநிதிகள் சந்திப்பு
x
தினத்தந்தி 6 March 2020 3:15 AM IST (Updated: 6 March 2020 3:06 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை நேற்று இஸ்லாமிய அமைப்பின் பிரதிநிதிகள் சென்னையில் சந்தித்தனர்.

சென்னை, 

தமிழகத்தின் ஜனநாயக முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில தலைவர் காஜா மொய்தீன், தமிழ்நாடு ஆஹ்லே சுன்ன அமாத் கூட்டமைப்பு அமைப்பாளர் மவுலவி சுலைமான் உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய அமைப்பின் பிரதிநிதிகள் நேற்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சென்னையில் சந்தித்தனர். 

அப்போது குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக முதலில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததற்கு தங்களின் நன்றியை தெரிவித்தனர். மேலும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டம், மக்கள் பங்கெடுக்கும் போராட்டமாக மாறுவதற்கு கமல்ஹாசனின் ஆதரவு வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து கமல்ஹாசன், “எல்லா வகையிலும் இந்திய இறையாண்மைக்கும், இந்திய மக்களின் ஒற்றுமைக்கும் உறுதுணையாக இருப்பேன் என்றும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டம் உறுதியாக வலிமையாக நடைபெற வேண்டும், அதில் வன்முறை புகுந்து விடக்கூடாது” என்று முஸ்லிம் அமைப்பு பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது மலபார் முஸ்லிம் சங்கத்தின் பிரதிநிதிகளும் உடன் இருந்தனர்.

Next Story