சென்னை அண்ணாசாலையில் குண்டு வீச்சு: மதுரை கோர்ட்டில் 4 பேர் சரண்


சென்னை அண்ணாசாலையில் குண்டு வீச்சு: மதுரை கோர்ட்டில் 4 பேர் சரண்
x
தினத்தந்தி 6 March 2020 4:30 AM IST (Updated: 6 March 2020 4:23 AM IST)
t-max-icont-min-icon

சென்னை அண்ணாசாலையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்கள் 4 பேரும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மதுரை, 

சென்னை அண்ணாசாலை பகுதியில் சில நாட்களுக்கு முன்பு சாலையில் ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் அந்த சம்பவத்தில் தொடர்புடைய சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த ஜான் என்ற ஜான்சன் (வயது 28), கமாலுதீன் (30), ராஜசேகர் (28), பிரசாந்த் (25) ஆகிய 4 பேரும் மதுரை மாவட்ட 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர்.

அவர்களை வருகிற 11-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு முத்துராமன் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story