வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு


வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 6 March 2020 3:26 PM IST (Updated: 6 March 2020 3:26 PM IST)
t-max-icont-min-icon

வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.  நேற்று குமரியின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இந்தநிலையில் வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ்ஸை ஒட்டி இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story