மாநில செய்திகள்

க.அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது - மு.க.ஸ்டாலின் + "||" + Anbazhagan being treated at the hospital MKStalin

க.அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது - மு.க.ஸ்டாலின்

க.அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது -  மு.க.ஸ்டாலின்
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97). வயது முதிர்வு காரணமாக கடந்த மாதம் வரை வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். 

அவரது உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில்  திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்த பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வயது முதிர்வின் காரணமாக மருத்துவ சிகிச்சைக்கு அன்பழகனின் உடல் ஒத்துழைக்கவில்லை. தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...